உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வரும். வேண்டியது நிறைவேறும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். விரைவாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் எதிர்பார்த்தபடி சாதகமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிப்பது கவலையை அளிக்கும். குடும்பத்தில் தகவல் தொடர்பில் தடுமாற்றம் ஏற்படலாம். எனவே, வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை சூழல் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எதிர்பாராத பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் எழலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகைளைத் தவிர்க்கலாம். நிதிநிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள உங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் பதற்றமான சூழல் இருக்கும். இதனால் வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
சிறப்பான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது அமைதியைத் தர உதவும். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். குடும்பத்தினருடன் வெளியே சென்று வருவீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். எனவே, இன்றைய நாளில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் நட்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று கடினமான நாளாக இருக்கும். பொறுப்புக்கள் கூடும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வேலையில் சாதகமான பலன் இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் குடும்பத்தின் தேவை அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் வரலாம்.
மந்தமான நாளாக இருக்கும். ஆர்வமின்மை, ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் வேலையை முடிக்க முடியாத அல்லது வேலையில் தவறு ஏற்படும் சூழல் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை இருக்கும். கணவன் மனைவி இடையே, குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறையலாம்.
அமைதியான நாளாக இருக்கும். ஆன்மீகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். வேலையில் அலைச்சல் ஏற்படலாம். உங்களுக்கான வேலையை விரைவாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். அனுசரித்து நடப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
உற்சாகமான நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையை விரைவாக செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
சவால் நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தரும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழலாம். வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.