உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சிறப்பான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
செயல்திறனை மேம்படுத்தினால் வெற்றிகரமான நாளாக மாறும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை சூழல் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்வீர்கள். குடும்பத்தில் மோதல் ஏற்படாமல் இருக்க அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவும். நிதி நிலை மிதமான பலன் கொண்டதாக இருக்கும். செலவு அதிகரிக்கலாம்.
நன்மை நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வேலைப் பளு அதிகரிக்கும். நிதானத்துடன் அனுசரித்து நடப்பதன் மூலம் சவாலைச் சமாளிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சாதகமான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.
முயற்சிகள் வெற்றிபெறும். எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலை சூழல் திருப்தியாக இருக்கும். வேலையை விரைவாக செய்வீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையில் திறமையை நிரூபிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை லாபகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
துடிப்பான நாளாக இருக்கும். தேவைகள் நிறைவேறுவது மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். நிலுவையிலிருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சுமுகமான நாளாக இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சாதகம் குறைவான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவது நன்மையாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை செய்யும் ஆர்வம் இருக்காது. இதனால் கவனக் குறைவு ஏற்பட்டு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
சமநோக்கு நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
சாதகமான நாளாக இருக்கும். ஆற்றலுடனும் உறுதியுடனும் இருப்பீர்கள். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.