உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
அனுகூலமான நாளாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாலையில் உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும்.நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
சாதகமான நாளாக இருக்காது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். குடும்பத்தினருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. வீண் செலவுகள் ஏற்படலாம்.
ஓரளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிபெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரியால் அனுகூலம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் ஆதரவு ஆதாயம் தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
சுறுசுறுப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பும் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இருப்பினும் போதுமான பணம் கையிருப்பில் இருக்கும் என்பதால் சமாளித்துவிடுவீர்கள்.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இதனால் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். வேலையை நிதானத்துடன் செய்யுங்கள். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் ஏற்பட மனஸ்தாபம் நீங்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்திகரமான நாளாக இருக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பர். வாழ்க்கைத் துணைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.
ஏற்றம் இறக்கம் என இரண்டும் கலந்த கலவையான நாளாக இருக்கும். எதிரிகளால் தொல்லை ஏற்பட்டு நீங்கும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண வரவு இருக்கும். அதை விட செலவும் அதிகமாக இருக்கும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வேலையில் ஆர்வக் குறைவு ஏற்படும். இதனால் வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
பொறுமை, நிதானத்துடன் செயல்பட்டால் சுமுகமான நாளாக இருக்கும். புதிய முயற்சி, முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். வாழ்க்கைத் துணைவரால் செலவுகள் ஏற்படலாம். நிதி நிலை சாதாகமாக இருக்காது. செலவு விஷயத்தில் கவனம் தேவை.
சீரான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம். செலவுகளால் கையிருப்பு கரையலாம்.