உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
மந்தமான நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பாட்டால் சாதிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணப் புழக்கம் போதுமானதாக இருக்காது. சேமிப்பு குறையலாம்.
சாதகமான நாளாக இருக்காது. மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சிக்கவும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் இணக்கமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
நன்மையான நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்த சேரும் வேலைப் பளு அதிகரித்தாலும் விரைவாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். வெளியே சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். முயற்சிகள் பலன் தரும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். உத்வேகத்துடன் நிலுவையில் வைத்திருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். சாதகமான பலன்களைப் பெற கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். வேலையில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்.
ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்னைகளை சமாளிக்கலாம். வேலையில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிப்பு குறையலாம்.
ஏற்ற இறக்கம் இன்றி இன்றைய நாள் சீராக இருக்கும். தடைகள் பல வந்தாலும் சமாளித்து திருப்தி காண்பீர்கள். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். வேலை காரணமாக வௌியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் காணப்படும். கனிவுடன் பேசுவது, பழகுவதன் மூலம் பிரச்னை ஏற்படாமல் தடுக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலை கவலையை அளிக்கலாம்.
சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். முழு ஆற்றலை வௌிப்படுத்தி வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணைவர் மூலம் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
சற்று சவாலான நாளாக இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது சாதகமான பலனைப் பெற உதவும். வேலையில் மந்த நிலை காணப்படும். இதன் காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். அமைதியாக விட்டுக்கொடுத்து நடப்பது அமைதியை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
வழக்கமான நாளாக இருக்கும். அன்றாட செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படலாம். திட்டமிட்ட செயல்பட்டால் இதை சமாளிக்கலாம். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரியின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நிதி நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். வீண் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. திட்டமிட்டு செயல்படவில்லை என்றால் இழப்பு ஏற்படலாம். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து நடப்பதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்கலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்த வேலையை எல்லாம் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணைவருடன் நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.