உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
கவனக் குறைவு காரணமாக இழப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கலாம். எதையும் திட்டமிட்டுப் பல முறை யோசித்துச் செயல்படுத்துவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே சுமுக உறவு குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கவனத்துடன் இருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.
நம்பிக்கை அளிக்கும் நாளாக இருக்கும். புதிய அணுகுமுறை வெற்றியை பெற்றுத் தரும். நிதானத்துடன் செயல்படுங்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் கிடைக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு சாதகமான பலனை பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் கலந்து பேசி செயல்படுவதன் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் மனக் குழப்பம், கவலை ஏற்படலாம். இதைத் தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பணப் புழக்கம் சிறப்பாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
மந்தமான நாளாக இருக்கும். மனதில் நம்பிக்கை குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்பு ஏற்படலாம்.
முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி காணலாம். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். வேலை சூழல் சாவல் மிகுந்ததாக இருக்கும். மற்றவர்களைக் கவரும் வகையில் பேசி பிரச்னைகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சுமுகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். தடைகளை சந்தித்தாலும் கடைசியில் வெற்றி காண்பீர்கள். வேலையில் பிரச்னைகள் எழுந்து மறையும். வேலையை மும்முரமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும்.
இலக்குகளை நோக்கி செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் வெற்றிகரமாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடன் சுமை அதிகரிக்கலாம்.
தொடக்கத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும் நாளில் முடிவில் வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகளை கைவிட வேண்டாம். வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் அமைதியை தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். மற்றவர்களுடனான தகவல் தொடர்பு திறமையால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
அனுகூலமான நாளாக இருக்காது. மனதில் குழப்பம் ஏற்படலாம். எனவே, மனதை அமைதியாக வைத்திருக்க பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் எழலாம். பெரியவர்கள் ஆலோசனை கேட்டுச் செயல்படுவது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
சவாலான நாளாக இருக்கும். மனதில் பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் வெளிப்படும். வேலையில் கவனக் குறைவு ஏற்படும். இதனால் உயர் அதிகாரியுடன் பிரச்னை ஏற்படலாம். கவனத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.