உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
சிறப்பான நாளாக இருக்கும். இலக்கை நிர்ணயித்துச் செயல்படும் போது வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். பொறுப்புக்களைச் சரியான முறையில் நிறைவேற்றுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் இயல்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே ன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
சுமாரான நாளாக இருக்கும். மனதை அமைதியாக வைத்திருக்க ஆன்மிக காரியங்களில் ஈடுபடலாம். வேலையில் பதற்றமான சூழல் காணப்படும். வேலையை முடிக்க முடியாமல் தடுமாறும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
ஓரளவுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவு எடுக்கும் போது ஒன்றுக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்
அமைதியான நாளாக இருக்கும். பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலையில் நிதானத்துடன் செயல்படுவீர்கள். இதனால் கால தாமதம் ஏற்படும் சூழல் வரலாம். குடும்பத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.
உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நல்லிணக்கமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.
வாய்ப்பு நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொண்டால் வெற்றிகளைக் காணலாம். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் கடைசியில் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு. நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
மனதில் பயம், பதற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கும்.
சற்று கடினமான நாளாக இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். வேலை காரணமாக அலைச்சலைச் சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் ஏமாற்ற உணர்வு இருக்கும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மகிழ்ச்சியான நாளாக இருக்காது. நம்பிக்கையாக இருந்த விஷயங்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். வேலையில் தடைகள் அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்னை ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். சிறிதளவு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். அமைதியைத் தக்க வைக்க எந்த பிரச்னையாக இருந்தாலும் வாழ்க்கைத் துணைவருடன் கலந்து பேசி முடிவு செய்வது நல்லது. பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.