26-08-2024 இன்றைய ராசிபலன்!
26-08-2024 இன்றைய ராசிபலன்!

26-08-2024 இன்றைய ராசிபலன்!

மன உறுதியுடன் கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும்.

உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!

1. மேஷம்

Explore your daily horoscope for July 1, 2024, and gain insights into love, career, health, and finance. Find out what the stars have in store for.
மேஷம்

சாதகமான நாளாக இருக்காது. எனவே, முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் திறமையாக முடிக்க முடியும். குடும்பத்தில் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுகள் அதிகரிக்கும்.

2. ரிஷபம்

ரிஷபம்
ரிஷபம் Meta AI

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. வாழ்க்கைத் துணைவருடன் நிதானமாக மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் வரலாம்.

3. மிதுனம்மிதுனம்

மிதுனம்
மிதுனம் Meta AI

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். இந்த சவால்களை சமாளிப்பதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையில் கவனக் குறைவு ஏற்படலாம். இதனால் தவறுகள், தாமதங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக ஊயர் அதிகாரியின் கோபத்தைச் சம்பாதிக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இதனால் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

4. கடகம்

கடகம்
கடகம்

ஓரளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலையில் திறமையை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

5. சிம்மம்

சிம்மம்
சிம்மம்

மன உறுதியுடன் கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புத்துணர்வுடனும் மகிழ்ச்சியான மனநிலையிலும் இருப்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கலாம். இருப்பினும் விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

6. கன்னி

கன்னி
கன்னி

சவாலான சூழல்கள் கொண்ட நாளாக இருக்கும். முயற்சிகளை மட்டும் கைவிடாமல் முன்னேறுங்கள். வேலையில் மந்தமான சூழல் இருக்கும். தன்னம்பிக்கையைக் குறைக்கும் வகையில் வேலையில் நிகழ்வுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். நிதானத்துடன் செயல்பட்டால் வாழ்க்கைத் துணைவருடன் நட்புறவை மேம்படுத்தலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.

7. துலாம்

துலாம்
துலாம்

சாதகமான நாளாக இருக்காது. பெரிய எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிதானம் இழந்து காணப்படுவீர்கள். இதன் காரணமாக வாழ்க்கைத் துணைவருடன் மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

8. விருச்சிகம்

விருச்சிகம்
விருச்சிகம்

தொடக்கத்தில் சில தடைகளைக் கண்டாலும் அவை மறைந்து வெற்றிகளைக் காண்பீர்கள். மிகச் சிறப்பான நாளாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

9. தனுசு

தனுசு
தனுசு

சிறப்பான நாளாக இருக்கும். திருப்தியான, மகிழ்ச்சியான மனநிலை இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வேலையை விரைவாக முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான பலன் கிடைக்கும். நிதி நிலை முன்னேற்றமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

10. மகரம்மகரம்

மகரம்
மகரம்

சராசரி பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். நிதானத்துடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட வேண்டும். வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். இருப்பதைக் கொண்டு நிறைவாக இருப்பீர்கள்.

11. கும்பம்

கும்பம்
கும்பம்

சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் கடின உழைப்பை வெளிப்படுத்தினாலும் முன்னேற்றம் கிடைக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னையில் சிக்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவியிடையே மோதல், மன வருத்தம் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

12. மீனம்

மீனம்
மீனம்

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையான செயல்பாட்டுக்கு உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com