உங்கள் ராசி அடிப்படையில் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே
சாதகமான நாளாக இருக்காது. ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை சுமை காரணமாகத் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
ஓரளவுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். பிறருடன் பேசும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு காரணமாக விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும். விட்டுக்கொடுத்து நடப்பதால் அமைதியான சூழலை ஏற்படுத்தலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்கள் வழியில் புதிய தொடர்புகள் உருவாகும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். பண வரவுக்குச் சிறிதளவு வாய்ப்பு உள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும். பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
துடிப்பான நாளாக இருக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். வேலையில் உற்சாகத்துடன் பங்கேற்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு வலுவாகும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. அதீத உணர்ச்சிப் பெருக்கு காரணமாக எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி குறையலாம். நட்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.
சற்று மந்தமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலையில் தடுமாற்றம் இருக்கும். கவனத்துடன் செயல்பட முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். பேசும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.
வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். அதை பயன்படுத்திக் கொண்டால் அனுகூலமான நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக நிலுவையில் வைத்திருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கடினமான சூழல் நிலவும் நாளாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். வேலையில் கடுமையான சூழல் இருக்கும். வேலை காரணமாக அலைச்சல் ஏற்படலாம். அதீத உணர்ச்சிப் பெருக்கை குடும்பத்தில் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவ விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். நிதி நிலை ஏமாற்றம் அளிக்கும். செலவுகள் அதிகரிக்கும்.
மனதை உற்சாகத்துடன் வைத்திருப்பதன் மூலம் இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம். மனதில் தோற்றும் சோர்வை விரட்ட வேண்டும். வேலைப் பளு கவலையை அளிக்கும். திறமையை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண இழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.
சாதகமான நாளாக இருக்காது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலையில் முன்னேற்றம் இருக்காது. உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கணவன் மனைவி இடையே அமைதி நிலவ ஈகோவை தவிர்ப்பது நல்லது. பணப் புழக்கம் குறைவாக இருக்கும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
நிதானத்துடன் இருக்க வேண்டிய நாள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்பு, பொறுப்புக்கள் மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதிநிலை மகிழ்ச்சியை அளிக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.