இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

05-07-2024 இன்றைய ராசி பலன்!

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

குரோதி ஆண்டு, ஆனி 21, வெள்ளிக்கிழமை

உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!

1. மேஷம்

மேஷம் Aries
மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். அனுசரித்து நடப்பதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படலாம்.

2. ரிஷபம்

Taurus ரிஷபம்
ரிஷபம்

சிறப்பான நாளாக இருக்கும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். பலன்கள் நிறைந்த நாளாக அமையும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

3. மிதுனம்

Gemini மிதுனம்
மிதுனம்

ஓரளவுக்கு சுமுகமான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னை வரலாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். அமைதியாக இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். செலவுகள் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

4. கடகம்

Cancer கடகம்
கடகம்

முயற்சிகள் வெற்றிபெறக் கடின உழைப்பை வெளிப்டுத்த வேண்டிய நாள். தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் சோர்ந்துவிடக் கூடாது. வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் சமாளிக்கலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கவலையை அளிக்கும்.

5. சிம்மம்

Leo சிம்மம்
சிம்மம்

திட்டமிட்டு நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். வாய்ப்புகள் தேடி வரும். அதை கவனத்துடன் கையாள வேண்டும். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கவனக் குறைவால் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

6. கன்னி

Virgo கன்னி
கன்னி

முயன்றால் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

7. துலாம்

Libra துலாம்
துலாம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு உரிய பலனைப் பெறுவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு சாதகமாக உள்ளது. பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

8. விருச்சிகம்

Scorpio விருச்சிகம்
விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். முயற்சியில் தடைகளைக் காண்பீர்கள். அனைத்தையும் சமாளித்தால் வெற்றி பெறலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலை காரணமாக எதிர்பாராத பயணத்துக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவுகள் ஏற்படலாம்.

9. தனுசு

Sagittarius தனுசு
தனுசு

சவாலான, குழப்பமான சூழல் கொண்ட நாளாக இருக்கும். தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். வேலை சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வழக்கமான வேலை கூட கடினமானதாகத் தோற்றும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். செலவுகள் அதிகரிக்கும். செலவைச் சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம்.

10. மகரம்

Capricorn மகரம்
மகரம்

திருப்திகரமான நாளாக இருக்கும். உடன் பிறந்தோர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

11. கும்பம்

Aquarius கும்பம்
கும்பம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலை சூழல் உற்சாகமானதாக இருக்கும். சுறுசுறுப்பாக பணியை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

12. மீனம்

Pisces மீனம்
மீனம்

சாதகமான நாளாக இருக்காது. கவலைகள் அதிகரிக்கும். வேலை சூழல் இறுக்கமானதாக இருக்கும். வேலையில் பல சவால்களை சந்திப்பீர்கள். வேலை காரணமாக அலைச்சல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கத்தைப் பராமரிக்க நிதானத்துடன் சகஜமாக செயல்படுவது நல்லது. நிதி நிலை சுமாராக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com