'வேட்டையன்' படத்தை அடுத்து ரஜினியுடன் இணையும் பாலிவுட் நடிகர்; யார் தெரியுமா?
'வேட்டையன்' படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் பிரபலம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. 'ஜெய்பீம்' ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் இந்த வாரம் வெளியானது. திரைப்படம் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருக்கும்போது தான் தன்னுடைய மைனர் அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரஜினி அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்திருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கான் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'ஜெயிலர்' படம் பான் இந்தியா வெளியீடு என்பதால் அதில் சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்தனர். அதேபோல், 'வேட்டையன்' படத்திலும் நடிகர்கள் அமிதால், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் எனப் பலர் நடித்தனர். இப்போது 'கூலி' படமும் பேன் இந்தியா வெளியீடு என்பதால் இதில் பாலிவுட்டில் இருந்து இணைந்துள்ளார். அவரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். படக்குழு விரைவில் அமீர்கான் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் என்பதை எதிர்பார்க்கலாம்.