ஜெயம் ரவி - ஆர்த்தி
ஜெயம் ரவி - ஆர்த்தி

மனைவி பிரச்னை எல்லாம் அப்புறம்தான்; அடுத்த படத்தை அறிவித்த ஜெயம் ரவி!

மனைவி ஆர்த்தி பிரச்னையை தள்ளி வைத்துவிட்டு நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்தார் நடிகர் ஜெயம் ரவி. ஆர்த்தி தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் எந்தவிதமான செலவு செய்தாலும் அதை ஆர்த்தியைக் கேட்டு செய்ய வேண்டியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், தன் வீட்டில் உள்ள வேலையாட்களுக்குக் கிடைக்கும் மரியாதை கூட தனக்குக் கிடைப்பதில்லை என்றும் சொன்னார் ஜெயம் ரவி.

இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்த ஆர்த்தி நீதிமன்றம் மூலம் தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் சொன்னார். மேலும், ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து தயாரித்த படங்கள் அனைத்தும் லாபம் கொடுத்தாலும் அதை நஷ்டக் கணக்கு காட்டி சினிமாவிலும் ரவியின் சம்பளத்தை உயர்த்த விடாமல் செய்தார் என்ற பேச்சும் அடிபட்டது.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீளவே தன் மனைவியிடம் இருந்து பிரிவதாகவும் ஜெயம் ரவி அறிவித்தார். அந்த வகையில் இப்போது ‘பிரதர்’ படத்தை அடுத்து அவருடைய அடுத்தப் படம் பற்றி அறிவித்துள்ளார். அதாவது, தன்னுடைய 34-வது படத்திற்காக 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபுவுடன் கைகோர்க்கிறார் ஜெயம் ரவ் இ.

பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்கும்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com