இயக்குநர் வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்த ஜூனியர் என்.டி.ஆர்... 'தேவரா' விழாவில் சுவாரஸ்யம்!
கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் “சென்னையில்தான் நான் குச்சுப்புடி கத்துக்கிட்டேன்னு நிறைய பேருக்குத் தெரியாது. ’தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல்னு வார்த்தையில் சொல்ல முடியாது. படம் சிறப்பா வர உழைச்ச படக்குழுவினர் எல்லாருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல, உங்க எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலானதா இருக்கும். படத்தை தியேட்டர்ல பாருங்க. ஜான்வியின் சிறப்பான நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கணும்றது என்னோட ரொம்ப நாள் ஆசை.
அதை நாம தெலுங்குல கூட டப் பண்ணிக்கலாம். சீக்கிரமே அந்த விருப்பம் நிறைவேறும்னு என நினைக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார். இவரின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் ‘ஜூனியர் என்.டி.ஆர்.- வெற்றிமாறன் காம்பினேஷன் என்றால் ஒரு மாஸ் சம்பவம் இருக்கு போலயே!’ என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.