நடிகர் மோகன் நடராஜன்
நடிகர் மோகன் நடராஜன்

விஜய்யின் கண்ணுக்குள் நிலவு படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு... சூர்யா நேரில் அஞ்சலி!

வில்லன் நடிகர்- தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
Published on

நடிகர்- தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் மோகன் நடராஜன். ’புதல்வன்’, ‘அரண்மனைக் காவலன்’, ‘பாட்டுப் பாடவா’, ‘மகாநதி’ உள்ளிட்டப் பல படங்களில் வில்லன் நடிகராக இருந்து கவனம் ஈர்த்தவர். பின்பு, நடிகை நதியா நடிப்பில் வெளியான ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ என்ற படம் மூலமாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். பாசில் இயக்கத்தில் நடிகர் விஜயின் ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யாவின் ‘வேல்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்டப் பல ஹிட் படங்களைத் தமிழில் தயாரித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார் மோகன் நடராஜன். தொடர் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இரவு 10.30 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். இன்று மதியம் 12 மணிவரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

மாலை 3 மணியளவில் திருவொற்றியூரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் அஞ்சலி குறிப்பு வெளியிட்டுள்ளார் மற்றும் திரையுலகினர் பலரும் மோகன் நடராஜன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com