"விரைவில் உண்மைகள் வெளியேவரும்"... மெளனம் கலைத்த மோகன்லால்!

"விரைவில் உண்மைகள் வெளியேவரும்"... மெளனம் கலைத்த மோகன்லால்!

கேரளத் திரையுலகில் ஹேமா கமிட்டி ஏற்படுத்தியுள்ள பரபரப்பிற்கு நடிகர் மோகன்லால் முதன்முறையாகப் பதிலளித்துள்ளார்.
Published on

ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளத் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். பல நடிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பூதாகரமானதை அடுத்து ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். இதனை கோழைத்தனமானது என நடிகை பார்வதி விமர்சித்தார்.

ஹேமா கமிட்டி
ஹேமா கமிட்டி

இதனை அடுத்து முதல் முறையாக மெளனம் கலைத்திருக்கிறார் மோகன்லால். “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கே தான் இருக்கிறேன். ஹேமா கமிட்டியின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ’அம்மா’ மீது அவதூறு பரப்ப வேண்டாம். மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது எப்படி அம்மா சங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியும்?

‘அம்மா’ மட்டுமே எப்படி எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்? இந்த புகாரால் மலையாள சினிமா பாதிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். மலையாளத் திரையுலகம் பாலிவுட் போன்று பிரம்மாண்டமானது கிடையாது. கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறது. இதுபோன்ற சமயத்தில் கேரள சினிமா சிதறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும் காவல்துறையும் தங்கள் கடமையைச் செய்கின்றன. ஹேமா கமிட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்ல வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகிலும் நடைபெறுகிறது. விரைவில் உண்மை வெளியே வரும். வயநாடு போன்ற பேரிடர் சமயத்தில் ’அம்மா’ பல உதவிகளைச் செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்” எனப் பேசியிருக்கிறார்.

logo
News Tremor
newstremor.com