’வேட்டையன்’ ரஜினிகாந்த்
’வேட்டையன்’ ரஜினிகாந்த்

ஏமாற்றம் தருகிறதா ‘வேட்டையன்’ ட்ரெய்லர்... ரஜினி ஹிட் கொடுப்பாரா?!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகயிருக்கும் 'வேட்டையன்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது.
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப், மஞ்சுவாரியர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பு படத்தின் ப்ரிவியூ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினி நடித்துள்ளார்.

திருநெல்வேலி, கேரளா, மும்பை, சென்னை உள்ளிட்டப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் நடிகர் அமிதாப்பிற்கு பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருந்தார். ஆனால், அமிதாப்பிற்கு அவர் குரல் ஒத்துவரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனால், ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப் குரலை தமிழ்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கொல்கத்தா டாக்டர் படுகொலையை நினைவுப்படுத்தும் வகையில் ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே இளம்பெண் படுகொலைக்காக மாணவர்கள் நீதி கேட்டு போராடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. ’அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்கறதை விட, அதிகாரத்தை கையில எடுக்கறது தப்பில்ல’ என ரஜினிக்கான பல வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது. ரஜினி மட்டுமல்லாது அமிதாப், ராணா, ஃபஹத் ஃபாசில் என ஒவ்வொருவரும் திரையில் வரும்போது அவர்களுக்கான வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், ரஜினி படத்துக்கான மாஸ் விஷுவல்ஸோ, வசனங்களோ, பரபரப்போ இல்லை என்பது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்திருக்கிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com