24 வருட கனவு...நடிகர் விக்ரம் பற்றி நெகிழ்ந்த ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!
’காந்தாரா’ என்ற கன்னட படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. இப்போது இந்தப் படத்தின் ப்ரீக்குவல் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இவர் நடிகர் விக்ரமை நேற்று பெங்களூருவில் சந்தித்து இருக்கிறார். பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருக்கிறது. விக்ரமுடன் நடிகர்கள் பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான புரோமோஷனுக்காக நேற்று படக்குழு பெங்களூரு சென்றுள்ளது. அங்குதான் விக்ரமை சந்தித்து இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
விக்ரமுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘நடிகராக ஆரம்பித்த என் பயணத்தில் விக்ரம் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். 24 வருடங்கள் கழித்து என் குருவை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான்தான் இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். என்னைப் போன்ற நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு நன்றி. லவ் யூ சியான் சார்! ‘தங்கலான்’ வெற்றிப் பெற வாழ்த்துகள்’ எனக் கூறியிருக்கிறார்.