58 வயதில் ஷாருக் கானின் இளமை ரகசியம்... வெளியான சீக்ரெட்!
‘பாலிவுட் பாட்ஷா’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் எப்போதும் பாக்ஸ் ஆஃபிஸில் கிங் என்பதை நிரூபித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான அவரது படங்கள் ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ என மூன்றுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது. இப்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாருக். இதில் அவரது மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது லைஃப் ஸ்டைல் மற்றும் 58 வயதிலும் தனது இளமை ரகசியம் பற்றி பகிர்ந்துள்ளார் ஷாருக். “நான் தினமும் அதிகாலை 5 மணிக்கு தூங்கப்போய் காலை 9 மணிக்கு எழுந்து விடுவேன். தூங்க செல்லும் முன்பு குளித்து விட்டு அரைமணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்வேன். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். என் குடும்பம்தான் என் மகிழ்ச்சிக்கும் இளமைக்கும் காரணம்” என்று கூறியிருக்கிறார் ஷாருக் கான்.