'கொட்டுக்காளி’
'கொட்டுக்காளி’

சிவகார்த்திகேயன் : ''நான்தான் இவருக்கு வாழ்க்கை கொடுத்தேன், கண்டுபிடிச்சேன்னுலாம் சொல்லமாட்டேன்!''

விழாவில் மறைமுகமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷை விமர்சித்துப் பேசியதாகவும் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது.
Published on

‘கூழாங்கல்’ படப்புகழ் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் இந்த மாதம் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் சில விஷயங்களை மனம் திறந்து பேசினார். “நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. நான் அதிகம் உலக சினிமாக்கள் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக இந்த விழாவில் விருது வாங்கி இருக்கிறார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் என கேள்விப்பட்ட போது எனக்கு புல்லரித்தது. வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்தப் படத்தை நான் தயாரிப்பதாக சொன்னேன்.

இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்ததுபோக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்தப் படத்திற்கு முன்பணமாகக் கொடுத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்கு படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கைக் கொடுத்த இந்த சினிமாவுக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.

நான் காலேஜ் படிக்கும்போதுதான் அதிக சினிமா பார்த்தேன். அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் எனப் பலரது படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா பென் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல். பாலாஜி சக்திவேல், மிஸ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

விழாவில் மறைமுகமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷை விமர்சித்துப் பேசியதாகவும் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது. ''இவங்களை கண்டுபிடிச்சி இவங்களுக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு யாரையும் சொல்லமாட்டேன். ஏன்னா, என்னை நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்லி சொல்லி பழக்கப்படுத்திட்டாங்க'' என்று பேசினார். நடிகர் தனுஷைத்தான் சிவகார்த்திகேயன் மறைமுகமாகத்தாக்கிப்பேசினார் என ஒரு தரப்பினரும், இயக்குநர் பாண்டிராஜைத்தான் சிவகார்த்திகேயன் சொன்னார் இன்னொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

பத்தவெச்சிட்டியே சிவகா!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com