நடிகர் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி

நகைச்சுவை நடிகர் தெனாலி மகனின் படிப்பு செலவுக்கு உதவிய விஜய்சேதுபதி!

நகைச்சுவை நடிகர் தெனாலியின் மகனுக்கு, நடிகர் விஜய்சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தியுள்ளார். இந்த விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்று வருகிறது.
Published on

’சின்னக் கலைவாணர்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மறைந்த நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து கலக்கியவர் நடிகர் தெனாலி. இவரது மகன் வின்னரசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை இருந்தது.

விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூறி இருக்கிறார். உடனடியாக 76 ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கல்வி கட்டணம் முழுவதையும் தான் ஏற்றிருக்கிறார்.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

”என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய்சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது” என நெகிழ்ந்திருக்கிறார் நடிகர் தெனாலி.

logo
News Tremor
newstremor.com