நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கு தடை கேட்டு மனு!

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர் ஒருவர் மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார். பின்பு கட்சிக்கான உறுப்பினர்கள் சேர்க்கையைத் துவக்கிய விஜய் கடந்த வாரத்தில் தனது கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். சிவப்பு, மஞ்சள் நிறத்திலான அந்தக் கொடியில் யானை, வாகை மலர் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கொடியை சுற்றி பல சர்ச்சைகளும் எழுந்தன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இந்த சர்ச்சைக்கெல்லாம் நடிகர் விஜய் தனது முதல் கட்சி மாநாட்டில் பதில் சொல்வார் என எதிர்பார்க்கலாம். தவெக-வின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தவெக முதல் மாநாடு நடக்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் மனு கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில், நிற பேதத்தை ஊக்குவிக்கும் மற்றும் சாதிய வெறியை தூண்டும் வகையிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வடிவமைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 கீழ் கடும் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டியில் நடைபெற தடை விதிக்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக பாடலில் குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை தாக்குவது போல் அறிமுகம் செய்த பாடலாசிரியர் மீதும் ஒளிப்பதிவாளர் மீதும் தலைவர் மீதும் பொதுச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை இயக்குனருக்கு சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் புகார் அளித்துள்ளார்.

logo
News Tremor
newstremor.com