ஃபெவிக்கால் விளம்பரமா, தூங்கு மூஞ்சி மலரா... விஜய்யின் தவெக கட்சி கொடியை சுற்றி பறக்கும் மீம்ஸ்!
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று தனது கட்சிக் கொடியை பனையூரில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே வெளியான தகவலின்படி இந்த கொடியின் நடுவில் வாகை மலர் இருப்பது இன்று உறுதியானது. வாகை மலரின் பக்கவாட்டில் பிளிறும் இரு யானைகள் அமைந்திருக்கிறது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் யானை சின்னம் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி அதை பயன்படுத்தக் கூடாது எனவும் விஜய் தன் கட்சிக் கொடியில் இருந்து அதை நீக்க வேண்டும் எனவும் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்த யானை ஃபெவிகால் பிராண்டில் உள்ளது எனவும் அதைத்தான் விஜய் திருப்பிப் போட்டிருக்கிறார் எனவும், ஸ்பெயின் நாட்டுக் கொடியை விஜய் காப்பி அடித்திருக்கிறார் எனவும் இணையவாசிகள் மீம்ஸ் தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் இது வாகை மலரே அல்ல என்றும், வாகை மலர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த மலர் அமெரிக்காவின் தூங்கு மூஞ்சி மலர் என்றும் சொல்லி வருகின்றனர்.