தங்கலான்
தங்கலான்

’தங்கலான்’ படம் வெளியாவதில் சிக்கல்; தயாரிப்பாளர் மீது வழக்கு!

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Published on

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷனை படக்குழு தீவிரப்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, ‘தங்கலான்’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை ஸ்டுடியோ க்ரீன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

ஞானவேல் ராஜா
ஞானவேல் ராஜா

இவர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் கடன் வாங்கி இருக்கிறார். இந்த கடன் தொகையை ஞானவேல் ராஜா திருப்பி செலுத்தாததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘தங்கலான்’ மற்றும் ‘கங்குவா’ படங்கள் வெளியாகும் முன்பு ரூ. 1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பணத்தை டெபாசிட் செய்து விட்டதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘தங்கலான்’ வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்திற்கு இப்படியான ஒரு சிக்கல் வந்துள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com