முடிவில்லா காதலின் தொடக்கம்... நாக சைதன்யா- ஷோபிதா நிச்சயதார்தத்தை அறிவித்த நாகர்ஜூனா!
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பின்பு நடிகர் நாக சைதன்யா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நாக சைதன்யா- ஷோபிதா இருவரும் டேட் செய்கிறார்கள் என்ற செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் உலா வரத் தொடங்கின. இந்த செய்திகளை இருவரும் மறுக்கவும் இல்லை உறுதிப்படுத்தவும் இல்லை. இப்படியான சூழ்நிலையில்தான், இன்று இருவருக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
இந்தப் புகைப்படங்களை நாக சைதன்யாவின் அப்பாவும் நடிகருமான நாகர்ஜூனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘இன்று காலை 9.42 மணிக்கு எனது மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கு ஷோபிதாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள்! முடிவில்லாத காதலின் தொடக்கம் இது!’ என்று அவர் கூறியிருக்கிறார்.