இயக்குநர் அவதாரம் எடுத்த சூர்யா மகள்... ஜோதிகாவின் நெகிழ்ச்சி பதிவு!

இயக்குநர் அவதாரம் எடுத்த சூர்யா மகள்... ஜோதிகாவின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர்கள் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜோதிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on

கோலிவுட்டில் பலருக்கும் பிடித்த ஆதர்ச தம்பதிகளாக சூர்யா - ஜோதிகா வலம் வருகின்றனர். திருமணத்திற்கு பின்பு சில வருடங்கள் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா '36 வயதினிலே' படம் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். பின்பு 'செக்கச் சிவந்த வானம்', 'காதல் தி கோர்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். படங்கள் தயாரிப்பதிலும் பிஸியாக வலம் வருபவர் உடற்பயிற்சி செய்வது, நண்பர்களோடு பயணம் செய்வது என தனக்கான நேரத்தையும் பயனுள்ளதாக செலவழித்து வருகிறார். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகும். இப்போது குழந்தைகள் தியா மற்றும் தேவ் இருவரின் படிப்பிற்காக மும்பையில் வசித்து வருகின்றனர் சூர்யா- ஜோதிகா. இதனால், பாலிவுட் படங்களிலும் இருவரும் கவனம் செலுத்துகின்றனர். தற்போது தங்கள் மகள் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மகிழ்வான செய்தியை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜோதிகா.

அதாவது, தியா 'லீடிங் லைட் : தி அன்டோல்ட் ஸ்டோரிஸ் ஆஃப் விமன் பிஹைண்ட் தி சீன்ஸ்' என்ற ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் வென்ற பதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், ''பொழுதுபோக்கு துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து அர்த்தமுள்ள ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக உன்னை நினைத்து பெருமைப்படுகின்றேன் தியா. பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்னையை வெளிக்கொண்டுவந்ததற்காக நன்றி. மேலும், இதுபோல் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார். அப்பா- அம்மாவைப் போல தியா நடிக்க வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர் இயக்கத்தில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com