நடிகை சமந்தாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை... ஆலியா பட் அதிரடி!

நடிகை சமந்தாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை... ஆலியா பட் அதிரடி!

நடிகை சமந்தாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஆலியா பட் வெளிப்படுத்தியுள்ளார்.
Published on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட்டின் ‘ஜிக்ரா’ திரைப்படம் இந்த வாரம் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பேன் இந்தியா படமாக இது வெளியாவதால் நேற்று ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இதில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வை ப்ரமோட் செய்தார். இதனால், மனம் மகிழ்ந்த நடிகை ஆலியா சமந்தாவுக்கு நன்றி சொன்னார். மேலும், ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சிறப்பித்த ‘ஊ சொல்றியா...’ பாடலையும் நிகழ்வில் பாடி காட்டி அசத்தினார்.

இதுமட்டுமல்லாது சமந்தாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் நடிகை ஆலியா பட் வெளிப்படுத்தத் தவறவில்லை. அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, “சமந்தா படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே முக்கியமானதாக இருக்கிறது. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்திலும் சினிமாத் துறையிலும் பெண்ணாக அவர் தனித்துத் தெரிகிறார்.

பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். இதுபோல எப்போதும் இருக்க வேண்டும். சமந்தாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது வெறும் மேடைப்பேச்சு அல்ல. த்ரிவிக்ரம் சார் எங்களுக்காக ஒரு கதையை உருவாக்குங்கள்” என்றார். நடிகை ஆலியாவின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com