கங்கனா
கங்கனா

பாலிவுட்டில் எல்லோரும் முட்டாள்கள்; விளாசிய கங்கனா!

பாலிவுட்டில் எல்லோருமே முட்டாள்கள் என நடிகை கங்கனா கடுமையாக பேசியுள்ளார்.
Published on

அரசியல், சினிமா என எந்த டாப்பிக் எடுத்தாலும் சர்ச்சை திரியை கொளுத்துவதில் கில்லாடி நடிகை கங்கனா. இப்போது பாலிவுட்டில் எல்லோருமே முட்டாள்கள் எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவர் நடிப்பில் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனை ஒட்டி அவர் பாலிவுட் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில்தான் பாலிவுட் கலாச்சாரம் பற்றி விளாசி இருக்கிறார்.

பாலிவுட் கலாசாரம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் பெரிதாக அங்கு நடக்கும் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. எந்த நடிகர்களுடனும் நான் நெருங்கிப் பழகுவதில்லை. எனக்கு அங்கு நண்பர்களும் இல்லை. அங்கு எல்லோருமே முட்டாள்கள். அவர்களுக்கு மூளையே கிடையாது. விலையுயர்ந்த கார்கள், வாட்சுகள், உடற்தகுதி, பார்ட்டி, அடுத்தவர்கள் உறவு என இதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. பாலிவுட்டில் இந்த வட்டாரத்தில் இருக்க வேண்டிய நபர் நான் இல்லை. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காலை எழுந்து, உடற்பயிற்சி செய்து, ஜிம் போய்விட்டு, சாப்பிட்டு எல்லோரும் போலவே இருப்பேன். அதனால், பாலிவுட் வட்டாரத்திற்கு நான் தகுதியான ஆள் இல்லை என நினைக்கிறேன்” என்கிறார் கங்கனா.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com