"லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் அவமானம்"... நடிகை மஞ்சு வாரியர்!
நடிகை மஞ்சு வாரியர் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்கள் நடித்து வருகிறார். தமிழில் இவரது கைவசம் விஜய்சேதுபதியின் ‘விடுதலை 2’ மற்றும் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் கைவசம் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது, “என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுகிறார்கள். இது இணையத்தில் தேவை இல்லாத விவாதங்களைக் கிளப்புகிறது. எனக்கு இந்த விஷயம் அவமானமாக இருக்கிறது. அந்தப் பட்டத்திற்கு என்று சில வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை. ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும்” எனச் சொல்லி இருக்கிறார். ‘அன்னபூரணி’ பட வெளியீட்டு சமயத்தின்போது நடிகை நயன்தாராவும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வதால் பல பிரச்சினைகள் கிளம்புவதாக சொல்லி இருந்தார். இப்போது மஞ்சு வாரியரும் இப்படி சொல்லி இருப்பது அவர் நயன்தாராவைக் குறிப்பிட்டு அப்படி சொன்னாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.