நடிகை ப்ரனிதா
நடிகை ப்ரனிதா

நடிகை ப்ரனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது... ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை ப்ரனிதாவுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Published on

நடிகர் கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரனிதா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். கடந்த 202-ல் நிதின் ராஜூ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தார்.

கணவர், குழந்தையுடன் அவர் பகிர்ந்திருந்த ஃபோட்டோஷூட்களுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விட்டனர். இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ப்ரனிதா கூறியிருக்கிறார். குழந்தை, கணவருடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பவர் ''டந்த சில நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. எங்களின் சாகசமும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இந்த நாட்களில் என் வாழ்வில் மீண்டும் ஒரு மேஜிக் நிகழ்ந்தது போலதான் இருக்கிறது'’ எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் ப்ரனிதாவுக்கும் குழந்தைக்கும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com