அழகான ரோஸூ நீ... மஞ்சள் புடவையில் மயக்கும் ரம்யா பாண்டியன்!
இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன். தயாரிப்பாளர், நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள்தான் இவர். என்னதான் திரையுலகப் பின்னணி இவருக்கு இருந்தாலும் ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு பெரிதாக பெயர் சொல்லும் படங்கள் அமையவில்லை. நடித்த ஒரு சில படங்களும் தோல்வியாக அமைந்தது. பின்னர், இவர் எடுத்த மொட்டைமாடி ஃபோட்டோஷூட் பயங்கர வைரலானது. பிக் பாஸ், குக் வித் கோமாளி என சின்னத்திரையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது.
குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரம்யாவின் வேறொரு முகத்தைப் பார்த்ததாகவும் அந்த சமயத்தில் ரசிகர்கள் கூறி வந்தனர். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் ரம்யா- புகழ் காம்பினேஷன் ரசிகர்களைக் கலகலப்பாக்கியது.
பின்னர், மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்தார். அடிக்கடி ஆன்மீகப் பயணம் செல்வதில் ஆர்வம் காட்டும் ரம்யா பாண்டியன் இப்போது மஞ்சள் நிற புடவையில், சிவப்பு சைடு ரோஸ் வைத்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவித்து வருகிறது.