''தமிழ் சினிமாவிலும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு''- 'பிக்பாஸ்' சனம் ஷெட்டி!
கேரளா அரசு அமைத்த நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி கேரள திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, விருப்பம் இல்லாமல் பாலியல் ரீதியாக இணங்க சொல்கிறார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது. கடந்த 2019-ம் ஆண்டே சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பல தடைகளை கடந்து நேற்று வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம்.
“இன்று இருக்கும் சூழ்நிலையில் நம் குடும்பத்தைக் கூட நம்ப முடியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் அட்ஜெஸ்மென்ட் தொடர்பாக யாராவது என்னை அணுகினால், ‘செருப்பால அடிப்பேன் நாயே’ என சொல்லி அங்கேயே கட் செய்துவிடுவேன். என் திறமைக்கு மதிப்பு கொடுத்து வாய்ப்பு வந்தால் அதை நான் சந்தோஷமாக செய்வேன். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். இது அதிகார ரீதியான துன்புறுத்தல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். மலையாள சினிமாவை போல தமிழ் சினிமாவிலும் இது நடக்கிறது. அங்கு போலவே, இங்கும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். நமக்காக நாம்தான் போராட வேண்டும்” என்று பேட்டியளித்திருக்கிறார் 'பிக்பாஸ்' புகழ் சனம் ஷெட்டி.