‘மெட்ராஸ்காரன்’ மேடையிலேயே முத்தங்கள் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா… ‘’முடிஞ்சிடுச்சு'’ என்ற ஷேன் நிகாம்!

மலையாள சினிமாவின் பிரபல நடிகரான ஷேன் நிகாமின் முதல் தமிழ்ப்படம் ‘மெட்ராஸ்காரன்’. ஷேன் நிகாம் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, சமீபத்தில் வெளியான ‘RDX’ படங்கள் மூலம் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தவர். மெட்ராஸ்காரன் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது!

கடந்த ஆண்டு தமிழில் ‘ரங்கோலி' எனும் படத்தை இயக்கியிருந்த வாலி மோகன்தாஸின் இரண்டாவது படம் ‘மெட்ராஸ்காரன்’. கலையரசன், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய ஐஸ்வர்யா தத்தாவின் பேச்சைப் பார்த்து ‘’வீட்ல பஞ்சாயத்துத்துதான் முடிஞ்சிச்சு'’ என்பதுபோல சைகை செய்தார் ஷேன் நிகாம்.

‘’நானும் ஷேனும் 6-7 வருஷமா ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ரொம்ப நல்ல மனுஷன் ஷேன். ஆனா, என்னப் பண்றது கல்யாணமாகி 3 குழந்தை பெத்துடுச்சு'’ என ஐஸ்வர்யா பறக்கும் முத்தங்களோடு ஷேனைப் பற்றிய தன் விருப்பத்தைச் சொல்ல, வெட்கப்படுவதா, கோபப்படுவதா எனத்தெரியாமல் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஷேன் நிகாம். 

படத்தின் இன்னொரு நாயகனான கலையரசன் பற்றி ஐஸ்வர்யா பேசும்போது ‘’அவர் நடிப்பைப் பார்த்து அழுதுட்டே இருந்தேன். கலையரசன் மிகவும் பணிவான ஒரு மனிதர். சிறப்பான நடிகர்'’ என்று குறிப்பிட்டார்.  

logo
News Tremor
newstremor.com