அஜித் குமார்
அஜித் குமார்

53 வயதில் மீண்டும் கார் ரேஸ்… ஐரோப்பிய ரேஸ் டிராக்கைத் தெறிக்கவிடத் தயாராகும் அஜித் குமார்!

2010-ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா-2 ரேஸ் பந்தயத்தில் யுரேஷியா மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காக கலந்துகொண்டு ரேஸ் ஓட்டினார் அஜித்குமார். இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கிறார்.
Published on

நடிகர் அஜித்குமார் கார், பைக் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவர். சினிமாவில் நடிப்பதற்கு முன்பும், நடிகரானப் பின்பும் பல்வேறு ரேஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆரம்பத்தில் பைக் ரேஸராக இருந்த அவர் பின்னர் கார் ரேஸராக மாறினார். அதிகபட்சமாக கடந்த 2010-ம் ஆண்டு ஃபார்முலா 2 ரேஸ்ஸ் சீசனில் பங்கேற்றிருக்கிறார் அஜித்குமார். அந்த ஆண்டு மொனாக்காவில் நடைபெற்ற ரேஸில் பெரிய விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

அதன்பிறகு பெரிய ரேஸ் போட்டிகளில் எதிலும் பங்கேற்காத அஜித்குமார் தற்போது மீண்டும் ரேஸ் களத்தில் இறங்கயிருக்கிறார்.

அஜித்குமார்
அஜித்குமார்

தற்போது 53 வயதாகும் அஜித்குமார் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் GT4 ரேஸில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கான ஸ்பான்சர்களும் அஜித்துக்குத் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஐரோப்பிய அணியில் கலந்துகொண்டு அஜித் ரேஸ் ஓட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ரேஸில் கலந்துகொண்டால் வயதான ரேஸர்களில் ஒருவராக அஜித்தும் சாதனைப்பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

logo
News Tremor
newstremor.com