அஜித் Vs சிவகார்த்திகேயன்
அஜித் Vs சிவகார்த்திகேயன்

அஜித் Vs சிவகார்த்திகேயன்… தீபாவளி ரிலீஸுக்கு விடாமல் முயற்சிக்கும் 'தல'!

விஜய், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் என இந்த ஆண்டின் பெரிய ரிலீஸான நான்கு படங்களுக்குமே தேதி குறிக்கப்பட்டு ப்ரமோஷன்கள் தொடங்கிவிட்டன. இதில் மிச்சம் இருப்பது தமிழ் சினிமாவின் ‘தல'யான அஜித்தின் ‘விடாமுயற்சி’ மட்டுமே.
Published on

லைகா தயாரிக்க, அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் ‘விடாமுயற்சி' படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், திட்டமிட்டபடி தீபாவளி ரிலீஸாக விடாமுயற்சி ரிலீஸாகுமா என்பதில்தான் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி செப்டம்பர் 5-ம் தேதி விஜய்யின் ‘GOAT’ படம் ரிலீஸாக, ஆயுதபூஜை விடுமுறையான அக்டோபர் 10-ம் தேதி ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’ என இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகின்றன. ரஜினி, சூர்யா என இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவது இரண்டு படங்களின் கலெக்‌ஷனுக்குமே பாதிப்பு என்றாலும் ‘கங்குவா’ ரிலீஸ் டேட்டை முன்பே அறிவித்துவிட்டதால் இனிமேல் தள்ளிப்போடுவது கஷ்டம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துவிட்டார். இதனால் 'வேட்டையன்', 'கங்குவா' என இரண்டு படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.

அஜித்
அஜித்

இதற்கு அடுத்தபடியாக தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 31-ம் தேதி கமல்ஹாசன் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்' படம் ரிலீஸாகிறது. அஜித்தின் ‘விடாமுயற்சி'யும் தீபாவளி ரிலீஸ்தான் என சொல்லப்பட்டாலும் இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அஜித் தரப்பில் இருந்து படத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவேண்டும் என நெருக்கடி கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், லைகா நிறுவனமோ ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் இணக்கமாகப் போகவேண்டும் என்பதற்காக இன்னும் யோசனையில் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது. அதனால் இப்போது அஜித் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்பது விடைதெரியாத கேள்வியாகவே இருக்கிறது. அஜித்தின் அழுத்தத்தால் ஒருவேளை ‘விடாமுயற்சி' தீபாவளிக்கு ரிலீஸ் ஆனால், அஜித்தும், சிவகார்த்திகேயனும் நேருக்கு நேர் மோதுவார்கள்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com