அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூன்

ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்; ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய நடிகர் அல்லு அர்ஜுன்!

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.
Published on

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளச்சரிவை அடுத்து கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உடைமகளை இழந்தவர்களுக்கு உதவ ரூ. 1 கோடி வழங்கியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றார்.

”ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் துன்பம் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நான் இறைவனிடம் வேண்டுக் கொள்கிறேன்” என்று அல்லு அர்ஜுன் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com