ஸ்டாலின், மாரிசெல்வராஜ், உதயநிதி
ஸ்டாலின், மாரிசெல்வராஜ், உதயநிதி

சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’... இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’ திரைப்படம் பார்த்துவிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Published on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் கடந்த வாரம் ‘வாழை’ திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. படம் பார்த்தப் பலரும் தங்களது உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். தான் சினிமாவிற்குள் வந்ததே ‘வாழை’ படம் எடுக்கத்தான் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இயக்குநர் பாலா, நடிகர் சூரி உள்ளிட்டப் பலரும் இந்தப் படத்திற்கு வாழ்த்துகள் கூறியிருந்தனர். தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அமெரிக்க பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’ படத்தைப் பார்த்திருக்கிறார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ''உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்! பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!’' எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் ''என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து, கர்ணன், மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com