தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

நல்ல நாள், நல்ல நேரம் : சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தீபிகா படுகோன் - ரன்வீர்சிங் தம்பதி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனுக்கு ஞாயிற்றுகிழமை (08-09-2024) பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
Published on

பாலிவுட் நடிகர்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை இருவரும் தங்கள் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்திருக்கிறார்கள். 

2018-ம் ஆண்டு இத்தாலியில் வைத்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி திருமணத்துக்குப் பிறகும் தீவிரமாக சினிமாவில் ஆர்வம் காட்டிவந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு இருவரும் குழந்தைப் பெற்றுக்கொள்வது என முடிவெடுத்து தற்போது பெற்றோர் ஆகியிருக்கின்றனர். 

பிரசவ வலி காரணமாக கடந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீபிகா படுகோன். அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை சிசேரியன் மூலம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தீபிகா - ரன்வீர் குடும்பத்தினர் டாக்டருக்கு குறித்து கொடுத்ததாகவும், அதன்படி அவர்கள் சொன்ன நேரத்தில் குழந்தையை சி-செக்‌ஷன் சிகிச்சை மூலம் டாக்டர்கள் பிரசவம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்ததையடுத்து தீபிகா - ரன்வீர் இருவருக்கும் சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்துகொண்டே இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து மழையைப் பொழிந்துகொண்டிருக்கின்றனர்.

logo
News Tremor
newstremor.com