தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்

மகிழ்ச்சியின் உச்சத்தில் தீபிகா-ரன்வீர்... கர்பத்தைக் கொண்டாடும் காதல் ஷூட்!

நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்கும் மகிழ்ச்சியில் போட்டோஷூட் நடத்தியிருக்கின்றனர். இருவரின் அன்பும், மகிழ்ச்சியும், எதிர்கால கனவும் கலந்த கலவையாக இந்த போட்டோக்கள் காணப்படுகின்றன.
Published on

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அடுத்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்கத் தயாராக உள்ளனர். இதற்காக மும்பையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவையும் இந்த ஜோடி வாங்கி இருக்கிறது. நடிகை தீபிகா தனது கர்ப்பத்தை அறிவித்த முதல் நாளில் இருந்தே 'அது ஃபேக்' எனப் பலரும் கூறி வந்தனர்.

அந்த விமர்சனங்களை எல்லாம் தீபிகா பொருட்படுத்தவில்லை என்றாலும் இந்த கமென்ட்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 'கல்கி 2898 ஏடி' திரைப்பட விழாவிற்கு தனது கர்ப்பமான வயிறு தெரியும்படி அவர் வந்திருந்தார்.

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்

மேலும், கர்ப்பமாக இருக்கும்போதே லேடி சக்தியாக படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். குழந்தை பிறப்பிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், தனது கணவர் ரன்வீருடன் சேர்ந்து நிறைமாதத்தில் அட்டகாசமான பிளாக் அண்ட் வொயிட்டில் ஃபோட்டோஷூட் நடத்தி இருக்கிறார் தீபிகா.

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்

தனது நிறைமாத வயிறு தெரியும்படி சந்தோஷமாக சிரித்துக் கொண்டு இருக்கிறார் தீபிகா. கேப்ஷனாக ஹார்ட்டின் மற்றும் திருஷ்டி இருக்கும்படி வைத்திருக்கிறார். இந்த ஃபோட்டோஷூட்டைப் பார்த்தப் பலரும் ரன்வீர்- தீபிகா ஜோடிக்குத் தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

logo
News Tremor
newstremor.com