இயக்குநர் சங்கத்துக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் நிதியுதவி... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!

இயக்குநர் சங்கத்துக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் நிதியுதவி... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!

கஷ்டப்படும் உதவி இயக்குநர்கள் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடா வருடம் நிதியுதவி செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
Published on

இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடா வருடம் 10 லட்சம் ரூபாய் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இதன் முதற்கட்டமாக 2024-ம் ஆண்டிற்கு நேற்று 5 லட்சம் ரூபாய் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா பேசும்போது “என்னுடைய படம் முடிந்த பின்பு கஷ்டப்படும் உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்திருந்தேன். இந்த விஷயம் கேள்விப்பட்டு பல உதவி இயக்குநர்கள் குடும்பம் கல்வி மற்றும் வேலைக்கு உதவும்படி என்னைத் தொடர்பு கொண்டார்கள்.

அதனால், என்னால் முடிந்த தொகையை இயக்குநர்கள் சங்கத்திடம் கொடுத்து அவர்கள் மூலம் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இந்த உதவி ஒரு குடும்பத்திற்காவது பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான். இதை என் சொந்தப் பணத்தில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com