’வாழை’ படத்தின் தாக்கம்; மாரிசெல்வராஜை கட்டியணைத்து கலங்கிய இயக்குநர் பாலா!
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நாளை ‘வாழை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மாரிசெல்வராஜ் சிறுவயதில் தான் பட்ட துயர் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி உணர்ச்சிகரமாகவும் இருப்பதாகப் படம் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பிரபலங்களுக்கான செலிபிரிட்டி ஷோ இன்று நடந்தது. படம் பார்த்த இயக்குநர் பாலா பேச வார்த்தைகளின்றி தவித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அருகில் அமர்ந்து அவரது கையைப் பிடித்து பேசாமல் அமர்ந்திருக்கிறார். பின்பு கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார். அதுபோலவே, நடிகர் சூரியும் ‘வாழை’ படம் பார்த்துவிட்டு மாரிசெல்வாராஜை கட்டியணைத்து முத்தமிட்டிருக்கிறார். ‘அண்ணன் சூரியின் அன்பு முத்தம்’ என இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் மாரிசெல்வராஜ்.