'' ‘வாழை’ படத்தை என் அப்பா, அம்மா பார்க்கக்கூடாது'' - இயக்குநர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் நிகிலா, திவ்யாதுரைசாமி, கலையரசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'வாழை' திரைப்படம் இந்த வாரம் 23-ம் தேதி வெளியாகிறது. படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், நெல்சன், பா.இரஞ்சித் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் ‘வாழை’தான் தன்னுடைய சிறந்த படம் எனக் கூறியிருக்கிறார்.
நிகழ்வில் அவர் பேசியிருப்பதாவது, “ ’வாழை’ என்னுடைய சினிமா பயணத்தில் சிறந்த படம் என்பேன். ‘வாழை’க்குப் பிறகு எத்தனைப் படங்கள் எடுத்தாலும் ’வாழை’ என் மனதிற்கு எப்போதும் நெருக்கமான ஒன்றுதான். முதல் முறையாக என் அம்மா-அப்பா பார்க்கக் கூடாது என்று நினைத்தப் படம்தான் ‘வாழை’. அவ்வளவு வலிகள் இதில் இருக்கிறது.
என்னுடைய வலி, அழுகையை இயக்குநர் ராமிடம் சொன்னபோது சினிமா எனும் கலையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அவருக்கு இந்தப் படத்தை நான் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய வலியை நான் சொல்லி இருக்கும் படம்தான் இது'' என்று பேசியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.