இயக்குநர் பா.இரஞ்சித் : 'தங்கலான்' என்றால் பலி கொடுப்பவன் என்று அர்த்தம்!

இயக்குநர் பா.இரஞ்சித் ‘தங்கலான்' என்பதற்கான பெயர் காரணத்தையும், ‘தங்கலான்’ படத்தை இயக்க வேண்டும் என ஏன் தீர்மானித்தார் என்பதுபற்றியும் இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடித்திருக்கும் ‘தங்கலான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு படக்குழுவினருடன் ரவுண்ட் டேபிள் உரையாடலில் கலந்துகொண்ட இயக்குநர் பா.இரஞ்சித் ‘தங்கலான்' படத்தை இயக்கவேண்டும் என்ற உந்துதல் எப்படி வந்தது என்பது குறித்துப்பேசியிருக்கிறார்.

''வரலாறுக்கும், கட்டுக்கதைகளுக்கும் இடையேயான இடைவெளிதான் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ‘தங்கலான்’ என்றால் பலி கொடுப்பன், வழி நடத்துபவன், மக்களைக் காப்பவன், மக்களுக்கான யோசிப்பவன் என அந்தப் பேருக்கு அர்த்தம் தெரிந்தவுடன்தான் தங்கலான் என்கிற அந்த கேரெக்டர் எனக்கு கிடைத்தது'’ என்று சொல்லியிருக்கிறார் பா. இரஞ்சித். பா.இரஞ்சித்தின் முழுமையான உரையாடலை வீடியோவில் காணலாம்!  

logo
News Tremor
newstremor.com