வெங்கட் பிரபு - விஜய்
வெங்கட் பிரபு - விஜய்

'GOAT' படத்தின் தியேட்டர் வெர்ஷனே OTT-யிலும் வெளியானது ஏன்? இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம்!

நடிகர் விஜய்யின் ‘GOAT’ படத்தின் தியேட்டர் வெர்ஷனே ஓடிடியிலும் வெளியானது ஏன் என இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Published on

நடிகர் விஜய், பிரபுதேவா, சிநேகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘GOAT’ படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் த்ரிஷா ‘மட்ட’ பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியதும் ஹிட் ஆனது. குறிப்பாக அப்பா-மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் மகனாக விஜய் காட்டிய வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. படம் இன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மூன்று மணி நேர படத்தின் முழு வெர்ஷனும் ‘டைரைக்டர்ஸ் கட்’டாக ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தியேட்டர் வெர்ஷனே ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. இதுபற்றி இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது டைரைக்டர்ஸ் கட் வெர்ஷனுக்கு விஎஃப்எக்ஸ் உள்பட பல்வேறு வேலைகள் செய்ய வேண்டியிருப்பதால் தற்போதைக்கு தியேட்டர் வெர்ஷனையே ஓடிடியிலும் பார்த்து ரசியுங்கள் எனக் கூறியுள்ளார் வெங்கட் பிரபு. படத்தின் முழுமையான வெர்ஷனை படத்தின் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து டெலீட்டட் சீன்களாகவோ அல்லது எக்ஸ்டண்ட் வெர்ஷனாகவோ வெளியிடுவோம் எனவும், அதுவரையிலும் தியேட்டர் வெர்ஷனை ஓடிடியில் பார்த்து மகிழுங்கள் எனவும் தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com