விஜய்யின் ‘GOAT’ ரிசல்ட் என்ன… சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸ் என்ன சொல்கிறார்கள்?
காலை முதல் சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்ஸ் என சொல்லப்படும் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர்கள் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டு வருகிறார்கள். அதில் குறிப்பிட்டவை மட்டும் இங்கே!
‘தங்கலான்’ படத்துக்கு ‘மங்கலான்' என முதல் ஆளாக நெகட்டிவ் விமர்சனம் எழுதிய கிறிஸ்டோஃபர் கனகராஜ் என்பவர் ‘’கோட் - வேட்டு. கெத்தா தளபதியிடம் இருந்து ஒரு ஆட்டம்’’ என ஃபயர் விட்டிருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளரான ஶ்ரீதர் பிள்ளை ‘’பக்கா அட்ரினலின் பம்பிங் ஆக்ஷன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து படத்தை ஸ்டைலாக நகர்த்திச் செல்கிறார். தன் உடல் மொழியில் விஜய் நிறைய மாறுபாடுகளைக் கொண்டு வந்திருக்கிறார். டிஏஜிங் தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கிறது. முதல் பாதி அசத்தினாலும் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வதோடு நீளமாக இருக்கிறது. ஆனாலும், க்ளைமாக்ஸ் தரம். எனது மதிப்பீடு : 3.5/5’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
லட்சுமிகாந்த் எனும் இன்ஃப்ளூயன்ஸரை எக்ஸ் தளத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் தனது X தளத்தில் ‘’இறுதி 40 நிமிட க்ளைமேக்ஸ் சமீப காலங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த ஒன்று'’ எனப் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் கொண்டிருக்கும் ராஜசேகர் என்பவர் 5 ஸ்டார்களுக்கு 3.5 ரேட்டிங் கொடுத்திருப்பதோடு ‘’இது பல உயர் தருணங்கள் மற்றும் பாப் கலாச்சார குறிப்புகளுடன் (கிரிக்கெட் மற்றும் திரைப்பட ரெஃபரன்ஸ்) நிரம்பியுள்ளது. குறிப்பாக கடைசி முப்பது நிமிடங்கள் தளபதி விஜய் ரசிகர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாகும்! தளபதி விஜய் இளைய தளபதியாக (பல சாயல்களுடன்) பல மாறுபாடுகளைக் காட்டியுள்ளார். படத்தில் நீளமான ஆக்ஷன் காட்சிகளும் சுமாரான பின்னணி இசையும் வேகத்தடையாக உள்ளன. ஆனாலும் படம் நம்மை மகிழ்விக்கிறது’’ என்று எழுதியிருக்கிறார்.
அமுத பாரதி என்பவர் ‘‘நல்ல முதல் பாதி. அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி. தொடக்கக் காட்சி, இடைவேளை ஃப்ரீஸ், ‘மட்ட’ பாடல் காட்சிகள், கிளைமாக்ஸ் ஆகியவை ஹைலைட்ஸ் தருணங்கள். வசீகரமான தளபதி & இளையதளபதியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யுவன் BGM அதிகம் கைகொடுக்கவில்லை. யோகி பாபு, சினேகா & பிரசாந்த் ஆகியோருக்கு நல்ல கதாபாத்திரங்கள். இரண்டாம் பாதியில் சில குறைபாடுகள் மற்றும் நீளம் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல கமர்ஷியல் படம். அனைவரையும் திருப்திப்படுத்தும்’’ என்று எழுதியிருக்கிறார்.