ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து

கோயில் பூசாரியுடன் ஆபாச வார்த்தைகளால் சண்டைபோட்ட ஜி.பி.முத்து... வைரலாகும் வீடியோ!

''கோயிலுக்கு நீ பூஜை வைக்கக்கூடாது'' என யூடியூப் பிரபலம் ஜிபி முத்து தரக்குறைவான வார்த்தைகளால் நடுத்தெருவில் பேசக்கூடிய காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோயிலாகும். இந்த கோயிலுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். தமிழ் மாதத்தின் முதல் நாள் இந்த கோயிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜிபி முத்துவும் ஊரில் இருந்தால் பங்கேற்பார். அதே போல் இந்த கோயிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் புரட்டாசி மாதத்தின் முதல் நாள் என்பதால் அந்த கோயிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்துள்ளனர்.

ஜிபி முத்து
ஜிபி முத்து

அப்போது அங்கு வந்த ஜிபி முத்து, மகேஷிடம் ''இந்த கோயிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது'' என்று கூறியுள்ளார். அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும், ஜிபி முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தெருவுக்கு வந்த ஜிபி முத்து மிகவும் தரக்குறைவாக தெருவில் நின்று பேசினார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com