இசையமைப்பாளர் ரெஹைனா
இசையமைப்பாளர் ரெஹைனா

ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு காரணம் இதுதான்... உண்மையை சொன்ன தாய் ஏ.ஆர்.ரெஹைனா!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்- சைந்தவி பிரிவு பற்றி முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷின் தாயும், இசையமைப்பாளருமான ரெஹைனா.
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் கடந்த 2013-ல் காதல் திருமணம் நடந்தது. இருவருக்கும் எட்டு வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் விவாகரத்தை அறிவித்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இதுபற்றி ஜிவி பிரகாஷின் அம்மாவும் இசையமைப்பாளருமான ரெஹைனா பேசியிருக்கிறார். இவரது குரலில் உருவாகியுள்ள ஆல்பம் ‘மாத்திக்கலாம் மாலை’.

இதன் வெளியீட்டு விழாவில் அவர் பேசியபோது, “பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்” என்றார். மேலும் அவரிடம் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எல்லோரும் சேர்ந்து வாழதான் ஆசைப்படுகிறோம். ஆனால், அது எல்லோருக்கும் அமைவதில்லை. ஜிவி பிரகாஷ்- சைந்தவி பிரிவுக்கு அவர்களது சூழ்நிலைதான் காரணம். இதில் யாரையும் குறை சொல்வதிற்கில்லை” என்றார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com