ஹினா கான்
ஹினா கான்

''புற்றுநோய்க்கு எதிரான போரில் வெல்ல உங்கள் ஆதரவு தேவை'' - நடிகை ஹினா கான் உருக்கம்!

புற்றுநோயுடன் போராடி வருவது தனக்கு மனச்சோர்வையும் அழுத்தத்தையும் அளிப்பதாகவும் அதேசமயம் இந்தப் போராட்டத்தில் தான் வெல்ல வேண்டும் என்று நினைப்பதாகவும் பாலிவுட் நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.
Published on

சின்னத்திரை, இந்தி பிக் பாஸ், பாலிவுட்டில் படங்கள் எனப் பிரபலமானவர் நடிகை ஹினா கான். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் அவர் தொடர்ச்சியாக நம்பிக்கையூட்டும் விதமாகவும் தான் எப்படி இந்த வலியை எதிர்கொள்கிறேன் என்றும் பதிவிட்டு வருகிறார்.

ஹினா கான்
ஹினா கான்

கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பே முடி உதிர்வு ஏற்படும் என்று தனது முடியை வெட்டிக் கொண்டார். அதையும் தாண்டி இப்போது கீமோதெரபி சிகிச்சையில் அளவுக்கதிகமாக முடி உதிர்வது தனக்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.

புற்றுநோய்க்கான இந்தப் போரில் தான் வெல்ல விரும்புவதாக உறுதியுடன் கூறியிருப்பவர் முடி உதிர்வால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மொத்தமாக முடியை மழித்திருக்கிறார்.

இந்தப் பயணத்தில் எல்லோருடைய அன்பும் ஆதரவும் வேண்டும் என்று சொல்லியிருப்பவர் தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி இருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ஹினாவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com