பரபரப்பாகும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்... முடிவுக்கு வருகிறதா?!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. இதில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமியின் மாமனாராக நடிகர் ரோசரி நடித்து வந்தார். இவருடைய கதாபாத்திரம் இறந்து விட்டது போன்று இப்போது கதையைக் கொண்டு செல்கிறார்கள். கதைப்படி பாக்கியலட்சுமிக்கு அதிகம் ஆதரவு கொடுப்பது ராமமூர்த்தி கதாபாத்திரம்தான்.
அவர் கதாபாத்திரத்தை முடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சில யூடியூப் தளத்தில் பேட்டி கொடுத்திருந்த ரோசரி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் விரைவில் முடிய இருக்கிறது என்ற விஷயத்தையும் சொல்லி இருந்தார்.
ஏனெனில், இந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால், ரசிகர்கள் ‘பாக்கியலட்சுமி’ சிரீயல் முடியப் போகிறதா எனக் கேட்டு வந்தனர். ஆனால், சீரியல் உடனே முடியப் போவதில்லை என்றும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சீரியல் தொடரும் எனவும் சொல்லி இருப்பதால் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகரக்ள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.