சுமலதா(ஆயிஷா) - ஜானி மாஸ்டர்
சுமலதா(ஆயிஷா) - ஜானி மாஸ்டர்

''பாலியல் புகார் உண்மை என்றால் என் கணவரை விட்டு விலகுவேன்'' ஜானி மாஸ்டர் மனைவி பரபரப்பு பேட்டி!

”என் கணவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் புகார் உண்மை என்றால் அவரை விட்டு விலகுவேன்” என ஜானி மாஸ்டர் மனைவி பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார்.
Published on

’மேகம் கருக்காதா’, ‘புட்ட பொம்மா’ உள்ளிட்டப் பல பாடல்களுக்கு ஹிட் நடனம் அமைத்தவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். இவரது நடனக்குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் இவர் நேற்று கைது செய்யப்பட்டார். மும்பை, சென்னை, ஐதராபாத் என பணி சார்ந்து பயணம் செய்த பல்வேறு இடங்களிலும் ஜானி மாஸ்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் புகாரில் கூறியிருக்கிறார். தான் மைனராக இருந்தபோதே ஜானி மாஸ்டரின் நடனக் குழுவில் சேர்ந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்ததன் அடிப்படையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஜானி மாஸ்டரை கைது செய்திருக்கிறது.

மனைவியுடன் ஜானி
மனைவியுடன் ஜானி

தன் கணவர் காவல்நிலையத்தில் இருப்பதாக வந்த போலி தொலைபேசி அழைப்பை நம்பி நரசிங்கி காவல் நிலையத்திற்கு வந்த ஜானி மாஸ்டர் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா தன் கணவர் மீதான பாலியல் புகார் முற்றிலும் பொய் என மறுத்திருக்கிறார். மேலும் அவர் பேசியிருப்பதாவது, “புகார் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அந்தப் பெண் கொடுத்திருக்கும் புகாருக்கு என்ன ஆதாரம்? ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லாமல் இப்போது வந்து புகார் கொடுக்க வேண்டும்? அந்தப் பெண் ஐதராபாத் திரைப்பட அசோசியேஷனில் பணம் கட்ட முடியாமல் தவித்தபோது உதவியவர் என் கணவர்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்திருந்தால் அந்தப் பெண் எப்படி ஜானி மாஸ்டருடன் வேலை பார்த்தது என் அதிர்ஷ்டம் என்றெல்லாம் பேசியிருப்பார். இந்த பாலியல் புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால் நான் என் கணவரை விட்டுக்கூட விலகத் தயார். அதேபோல, கணவர் ஜானி என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யவில்லை. அவரும் இந்துக்கள் தொடர்பான பண்டிகைகளில் பங்கேற்பார்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com