விஜய், ஜூனியர் என்டிஆர்
விஜய், ஜூனியர் என்டிஆர்

''விஜய் மாதிரி என்ஜாய் பண்ணி டான்ஸ் ஆடணும்'' - ஜூனியர் என்டிஆர்!

நடிகர் விஜய் போல இயல்பாக, என்ஜாய் செய்து நடனம் ஆட வேண்டும் என்று அவரது நடனத்தை சிலாகித்துப் பேசியிருக்கிறார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
Published on

கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'தேவரா' திரைப்படம் இந்த மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. நீரை மையப்படுத்தி இந்த படத்தில் அதிகமான காட்சிகள் உருவாகி இருப்பதாக சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் பான் இந்திய படம் வெளியாக இருக்கிறது அந்த நொடிகள் படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜூனியர் என்டிஆர். அதில் குறிப்பாக நடிகர் விஜய் உடனான நட்பு பற்றிய ஒரு பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

"சிலர் நடனத்தை ஜிம்னாஸ்டிக் போலவும் உடற்பயிற்சி போலவும் செய்வார்கள். அப்படி செய்யக்கூடாது. நடனம் என்பது இயல்பாக இருக்க வேண்டும். இதில் விஜய் சாரோட நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரொம்பவே என்ஜாய் பண்ணி டான்ஸ் ஆடுவார். அவருடைய நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். முன்பெல்லாம் அடிக்கடி போனில் பேசுவோம். இப்போது பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது" என்று சொல்லியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com