கமல்ஹாசன் காலில் அணிந்திருக்கும் மேட் இன் ஆஸ்திரேலியா செருப்பு… 15,000 ரூபாய்க்கு என்ன ஸ்பெஷல்?!
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பு நாணய வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததால் இன்று தனிப்பட்ட முறையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து நினைவு நாணயத்தைப் பெற்றுக்கொண்டார் கமல்ஹாசன். இந்த சந்திப்பின்போது புதுவகையான செருப்பு ஒன்றை அணிந்திருந்தார் கமல்ஹாசன்.
ஆஸ்திரேலியாவில் தயாராகும் ஸ்பெஷல் செருப்பு!
கமல்ஹாசன் அணிந்திருந்த செருப்பு மேட் இன் ஆஸ்திரேலியா செருப்பு. UGG எனும் நிறுவனத்தின் பிரத்யேக மாடலான Sport Yeah வகையைச் சேர்ந்தது. இந்தியாவில் இதன் விலை 15,000 ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள்.
இந்த செருப்பு EVA (ethylene-vinyl acetate) ஃபோமால் உருவாக்கப்பட்டுள்ளது. இது மென்மையான மற்றும் சொகுசான உணர்வைக் கால்களுக்கு வழங்குகிறது. நம் பாதத்தின் இயல்பான வடிவத்துக்கு ஏற்ப இந்த செருப்பு தயாரிக்கப்பட்டிருப்பதால், நீண்ட நேரம் அணிந்தாலும் காலுக்கு எந்தவிதமான வலியையும் தாராது. திறந்த பக்கில் டைப் மாடல் என்பதால் காற்றோட்டமாகவும், கால்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும். வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் கொண்ட செருப்பு என்பதால் மழைக்காலங்களில் அணியலாம். நீடித்து உழைக்கக்கூடியது.
இதுதான் கமல்ஹாசன் அணிந்திருக்கும் செருப்பின் ஸ்பெஷல். இப்போது சொல்லுங்கள் இந்த செருப்புக்கு 15000 ரூபாய் கொடுக்கலாமா?